தீபாவளி பரிசாக இந்தியர்களுக்கு நிலப்பட்டாவை பேராக் அரசு வழங்கி உதவியது!

பேராக் மாநிலத்தில் மஞ்சோங்கில் உள்ள கம்போங் பெக்கான் கெர்னி மற்றும் பீடோரில் உள்ள கம்போங் பாரு கோல பிக்காம் எனும் இடத்தில் சுமார் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மொத்தம் 36 குடும்பங்களுக்கு நிலபட்டாவை மாநில அரசாங்கம் வழங்கியது.வறுமை நிலையில் வசித்து இந்த குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசைகளை அமைத்து வசித்து வந்த இந்த குடும்பங்ள் நிரத்தரமாக வசிக்க நிலப்பட்டா கிடைக்க கடந்த 40 ஆண்டுகளுக்கு போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.இந்த விவகாரம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்திய விவகாரங்களுக்கான தலைவராக பொறுப்பேற்றுள்ள மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான அ. சிவநேசனின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.அதன் பின்னர் அவர் அந்த கிராமத்திற்கு நேரடியாக வருகை அளித்து மேற்கொண்ட குறுகிய கால முயற்சியின் பயனால் இன்று பலன் கிடைத்துள்ளது. அந்த நிலத்திற்கான நிலப்பட்டாவை மாநில அரசாங்கம் தங்களிடம் வழங்கியது தீபாவளி பரிசாக கிடைத்துள்ளதாக நிலம் கிடைத்தவர்கள தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles