
இம்மாதம் 3 ஆம் தேதி திங்கள்கிழமை 14ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான மூன்றாம் கூட்டம் தொடங்குகிறது.
பின்னர் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்.
நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஷப்ரூல்
அக்டோபர் 7 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தாக்கல் செய்யும் பட்ஜெட்
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.
வரும் அக்டோபர் 11 முதல் 26 வரை கொள்கை நிலையில் பட்ஜெட் விவாதிக்கப்படும்.
செயல்குழு நிலையிலான விவாதங்கள் வரும் நவம்பர் 3 முதல் 23 வரை நடைபெறும்.
அதன் பின்னர் மக்களவை அந்த மசோதாவை நிறைவேற்றும்.

