
காளிதாஸ் சுப்ரமணியம்
பத்துகேவ்ஸ், அக் 31-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்துமலை சிவனந்தா ஆசிரமத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு இளம் கொடை நெஞ்சர் அந்தோனி சாமி தோமஸ் அன்பளிப்புகளை வழங்கி பேருதவி புரிந்தார்.
ADS GOLD VENTURE SDN BHD நிறுவனத்தின் உரிமையாளருமான அவர் ஆண்டுதோறும் பெருநாள் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு தன்னலம் கருதாமல் உதவி புரிந்து வருகிறார்.
எந்த வகையில் இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 மழை சிவனந்தா ஆசிரமத்தை தேர்வு செய்து அங்கு தங்கியிருக்கும் குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.
அந்தோணிசாமி தோமஸ் வழங்கிய புத்தாடைகளை பெற்றுக் கொண்ட அவர்கள் பெரும் எல்லையில் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
தக்க நேரத்தில் எங்கள் இல்ல குழந்தைகளுக்கு உதவி புரிந்த அந்தோணிசாமி தோமஸுக்கு சிவானந்தா ஆசிரமம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டது.
எனது சமுதாய பணி எப்போதும் தொடரும் என அந்தோணிசாமி உச்சகத்தோடு தெரிவித்தார்.