ஈப்போ இந்தியர்களின் நன்மதிப்பு வரவேற்பை கண்டு நெகிழ்ந்தேன்!

ஈப்போ, நவ.3: இங்குள்ள லிட்டல் இந்தியா வளாகத்தில் தீபாவளி சந்தையின் இறுதி நாளில் இந்திய மக்கள் எனக்கும், போலீஸ்படைக் கும் வழங்கிய அமோக வரவேற்பை கண்டு நெகிழ்ந்து போனேன் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார் ஈப்போ மாவட்ட போலீஸ்படை தலைவர் ஏசிபி அபாங் ஜயினல் அபிடின் அபாங் அமாட் .

சரவாக் மாநிலத்தில் தாம் பிறந்து வளர்ந்துள்ளதாகவும், அங்கு இந்தியர்களை காண்பது அரிதாகும். இங்கு வந்த பிறகு அதிகமான இந்தியர்களை காண முடிந்ததை கண்டு மனம் மகிழ்ந்தேன். அதுமட்டுமின்றி, இந்திய சமூகத்தினர் மற்ற இனத்துவருடன் இணைந்து செயல்படுவதால் ஒற்றுமை, சுபீ்ட்சம் மற்றும் பரிவு மனப்பான்மை கொண்ட சமுதாயமாக காண முடுந்ததை கண்டு மகிழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு அந்நாட்டு மக்களின் நடவடிக்கைகள் கொண்டே அமையும். அதன் அடிப்படையில் இந்நாட்டு மக்கள் இன்றைய ஒற்றுமை மனப்பான்மையுடன் என்றென்றும் இருப்பது அனைவருக்கும் நன்மையே என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் பயணத்தின் நடுவே இந்திய மக்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவ்வேளையில் அவர்கள் வழங்கிய அமோக வரவேற்பு மற்றும் போலீசார் குடும்பத்தார் மீது அவர்கள் வைத்த நன்மதிப்பை கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன். இத்தகைய தீபாவளி திருநாளில் மக்களை சந்திப்பதில் மனதிற்கு சந்தோஷமாக உள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் ஈப்போ லிட்டல் வணிக சங்க தலைவர் விக்னேஸ் தில்லை ஈப்போ மாவட்ட போலீஸ்படை தலைவர் ஓசிபிடி அபாங் ஜயினலுக்கும், வணிக சங்கத்தின் ஆலோசகரும் பேராக் நகைக்கடை சங்கத்தின் தலைவருமான ்டத்தோ அமாலுடின் இஸ்மாயிலுக்கு சிறப்பு செய்தார். அதோடு, இந்திய பி40 குடும்பத்தினருக்கு ஓசிபிடி உணவுப்பொருட்கள் எடுத்து வழங்கி பேராக போலீஸ்படை சார்பில் தீபாவளி வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles