கே.பி.ஜே. பல்கலைக்கழகத்தில் மருந்துகத்துறையில் உயர்கல்வியை தொடங்கிய இன்பநிலா ஜெயகுமார் அத்துறையில் தனது டிப்ளோமா கல்விக்கான பட்டத்தை பெற்றார்.அவர் அக்கல்விக்கான “Dean’s List” விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சுங்கை மற்றும் பீக்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவியுமானவர் இவர் பீடோர் ஷேக் அப்துல் கனி இடைநிலையில் பள்ளியில் தனது கல்வியை முடித்தவருமாவார்.
தற்போது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மருந்துகத்துறையில் இளங்கலை கல்வியை மேற்கொண்டு வரும் இவர் இத்துறையில் தொடர்ந்து பயணிக்க விரும்புவதாகவும் இத்துறையில் முதுகலை கல்வியை மேற்கொள்வதே இலக்கு என்றும் குறிப்பிட்டார்.மேலும்,இவரது குடும்பத்தில் நான்காவது தலைமுறையின் முதல் பட்டதாரியுமான இவர் தன் உடன்பிறப்புகளுக்கு வழிகாட்டியாகவும் தன்னம்பிக்கையாகவும் திகழ்கிறார்.
மருந்தகத்துறையில் பட்டம் பெற்றாலும் தான் தமிழ்ப்பள்ளி மாணவி என்பதில் பெருமிதம் கொள்வதாக கூறும் இன்பநிலா கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.இன்பநிலாவின் தந்தை திரு.ஜெயகுமார் தாப்பா மாவட்ட மன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.