கோலாலம்பூர் நவ 8-
அடுத்தாண்டு முதல் உரிமத்திற்கு விண்ணபிக்காத சமூக ஊடகத் தளங்களின் பயன்பாட்டை முடக்க அரசுத் திட்டமிடவில்லை என்று தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார்.
மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடகச் சட்டம் சட்டம் 1998 (சட்டம் 588) இன் கீழ் அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் சமூக ஊடகத் தளங்களுக்கான உரிம நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையச் சட்டத்தின் அடிப்படையில் மற்ற நடவடிக்கைகளை எடுத்த பிறகு இது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கடைசி நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் அவர் உறுதியளித்தார்.
சமூக ஊடகங்களுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்த பிறகும் பயனர்கள் சமூக ஊடக தளங்களை அணுக முடியும் என்றார்.