கோலாலம்பூர் நவ 8
ஒரு நிமிடத்தில் 78 நாடுகளின் கொடிகளின் பெயரை சொல்லி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தமிழ்ப் பள்ளி மாணவன் ஜெஸ்வீகனை ம இகா பணிப்படை இன்று பாராட்டி சன்மானத்தை வழங்கி கௌரவித்தது
ஜேஸ்வீகன் போன்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் அன்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
8 வயதுடைய ஜேஸ்வீகன் கெடா பாடாங் செராய் பாடாங் மேவா தோட்ட தமிழ்ப்பள்ளியில் பயின்று வருகிறார்.
இவர் அண்மையில் 1 நிமிடத்தில் 78 நாடுகளின் கொடியின் பெயர்களை சொல்லி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சாதனையை புரிவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்த அவரின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று மாணவர் ஜெஸ்வீகன் தெரிவித்தார்.
அதே வேளையில் அம் மாணவரின் சாதனை அங்கீகரிக்கும் நோக்கில்தான் மஇகா பணிப்படை இன்றைய நிகழ்வை ஏற்பாடு செய்து அன்பளிப்புகளும் வழங்கியதாக அண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.
மேலும் அடுத்தடுத்து ஜேஸ்வீகன் சாதனைகளை படைப்பதற்கான உரிய வழிகாட்டலையும் உதவியையும் மஇகா வழங்கும்.
அதே வேளையில் ஜேஸ்வீகன் போன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைக்கு மஇகா எப்போதும் துனை நிற்கும் என்று அன்ட்ரூ டேவிட் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
இன்று கெடாவில் இருந்து கோலாலம்பூர் வந்த ஜெஸ்வீகன் குடும்பத்துக்கு அருமையான மதிய உணவையும் ம இகா பணிப்படை வழங்கியது.
இந்த இளம் வயதிலேயே இவரின் சாதனை வியக்க வைக்கிறது என்று ம இகா பணிப்படையினர் பாராட்டினர்.