ஷா ஆலம், நவ. 8 – சிலாங்கூர் மாநில அரசின் 2025 வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி மாலை 3.00 மணிக்குத் தாக்கல் செய்யவிருக்கிறார்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தின் அனெக்ஸ் கட்டிடத்தில் உள்ள சட்டமன்றத்தில் நடைபெறும் இந்த வரவு செலவுத் திட்டத் தாக்கல் நிகழ்வை சிலாங்கூர்கினி, சிலாங்கூர் ஜெர்னல், சிலாங்கூர்கினி மாண்டரின் மற்றும் சிலாங்கூர்கினி தமிழ் இணையத் தளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த பட்ஜெட் தாக்கல் நிகழ்வு https://www.facebook.com/ MediaSelangor வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இது தவிர, இண்ட்ஸ்டாகிராம், டிக் டாக், டெலிகிராம், எக்ஸ் தளம் மற்றும்
MYTV MANA-MANA. ஆகிய சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இந்த ஒளிபரப்பைக் காணலாம்.