பெய்ரூட்: நவ 12-
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்ல ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி தீவிரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான், சிரியா போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிரியாவின் டமாஸ்கஸுக்கு தெற்கே ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான குடியிருப்பை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா தளபதி, சிரியாவைச் சேர்ந்த நான்கு பொதுமக்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட தளபதி லெபனான் நாட்டை சேர்ந்தவன் என்றும், அவர் சிரியாவில் இருந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த செப்டம்பர் 23 அன்று லெபனான் மீது போர் தொடங்கியதிலிருந்து சிரியா மீதும் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.
ராய்ட்டர்
சிரிய தலைநகருக்கு தெற்கே உள்ள சையிதா ஜீனாப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் தாக்கியது குறிப்பிடத்தக்கது