மஇகா ஏற்பாட்டில்200 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 14-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று 200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

ம இகா நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமை தாங்கினார்.

மஇகா உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம், ம இகா இளைஞர் அணி தலைவர் அர்விந்த், இளைஞர் அணி துணை தலைவர் கேசவன், தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், நிர்வாக செயலாளர் டத்தோ ஏ.டி.குமரராஜா, விலாயா மாநில தலைவர் டத்தோ ராஜா சைமன், சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ சங்கர் ஜையங்கர், ம இகா ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம், செனட்டர் டத்தோ ஆர் சிவராஜ், இளைஞர் பிரிவு தேசிய உச்சமன்ற உறுப்பினர் சுகன் உட்பட தொகுதி தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ம இகா உச்சமன்ற உறுப்பினர் டத்தோ மோகனா முனியாண்டி தமது உரையில் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தீபாவளி அன்பளிப்புகளை பெற்ற கொண்டவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles