
வாஷிங்டன்: நவ 14-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், இன்று அதிபர் பைடனை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. அதிபர் பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கெளரவித்தார் ஓவல் அலுவலகம் வந்த டிரம்ப்பை வரவேற்று பேசிய ஜோ பைடன், அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் எனவும், அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.
ராய்ட்டர்