
சங்லூன் நவ 15
-சுங்கைபட்டாணியைச் சேர்ந்த எலிஸ்ரா ரேணுகா லெட்சுமணன் வட மலேசிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சர்வதேச கணக்கியலில் முதுகலை அறிவியல் (MSc) பட்டம் பெற்று தனது குடும்பத்திற்கு பெருமைச் சேர்த்துள்ளார்.
வங்கியில் பணிபுரிந்துக் கொண்டு இந்த பட்டப் படிப்பை பகுதி நேரமாக படித்த தமக்கு பெரும் சவலான அனுபவமாக அமைந்ததாக எலிஸ்ரா ரேணுகா கூறினார்.
இந்த மைல் கல்லை எட்டியதில் நம்பமுடியாத அளவிற்கு தாம் பெருமைப்படுவதாகவும் கூறினார்.
கடவுளின் அருளும், தனது குடும்பத்தினரின் அசைக்க முடியாத ஆதரவும், ஊக்கமும், தமது பணியிடத்தில் இருந்து கிடைக்கப் பெற்றதால்தான் இந்த வெற்றியினை தாம் அடைந்திருப்பதாக அவர் சொன்னார்.
பட விளக்கம்
எலிஸ்ரா ரேணுகா தனது தந்தை லெட்சுமணனுடன் மற்றும் தனது சகோதரியுடன்.

