மலேசியாவில் இணைய பகடிவதையை கையாள்வதற்கு டிக் டோக் ஒத்துழைப்பு வழங்கும்!

லீமா (பெரு), நவ 15: இணைய பகடிவதை மற்றும் மோசடி அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்சனைகளை கையாள்வதற்காக தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (SKMM), பேங்க் நெகாரா ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட சமூக ஊடக தளமான டிக் டோக் உறுதியளித்துள்ளது.

இன்று டிக் டாக் குழுவின் தலைமைச் செயல்முறை அதிகாரி ஷோ ஜி சியூ தலைமையிலான குழுவைச் சந்தித்தபோது இந்த விஷயம் எழுப்பப்பட்டது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“இந்த சந்திப்பில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சமூக ஊடக சேவைகள் மற்றும் இணைய செய்தியிடல் உரிமத்திற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை செயல்படுத்துவது உட்பட பல சிக்கல்களை நான் எழுப்பினேன்.”

“மலேசியாவில் டிக்டாக் மூலம் நிலவும் இணைய பகடிவதை, மோசடிகளின் அச்சுறுத்தல் மற்றும் அவதூறு கலாச்சாரம் போன்ற விஷயங்கள் பற்றியும் நான் பேசினேன்,” என்று அவர் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles