
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் நவ 15-
உலகில் உள்ள தமிழர்களை உலகத் தமிழ் பொருளாதார மாநாடு ஒன்றிணைக்கும் தளமாக விளங்குகிறது என்று
தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ப. சகாதேவன் தெரிவித்தார்.
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு இன்று கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் கோலாகலமாக தொடங்கியது.வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசிய, இந்திய, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாட்டின் நிறுவனரும் தலைவருமான தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஆர்எஸ் சம்பத் தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த தருணத்தில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று டத்தோ சகாதேவன் தெரிவித்தார். உலகத் தமிழர்களை பொருளாதரத்தில் உயர்த்தும் இது போன்ற மாநாடுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

