
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் நவ 15-
தண்ணீர் சேமிப்பு மிகவும் அவசியம். பள்ளி மாணவர்கள் மத்தியில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிர படுத்தப்படும் என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
கடந்த காலங்களில் குறிப்பிட்ட அளவில் தான் மழை பெய்யும்.
ஆனால் இப்போது நிலைத் தன்மை இல்லாத வானிலையாக உள்ளது.
திடீரென மழை பெய்கிறது.
ஒரு மணி நேரத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது
நிலையில்லாத வானிலையால் மழை இல்லாமல் போய்விட்டால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் வறட்சி ஏற்படும்.
ஆகையால் மக்கள் தண்ணீரை வீணாக்கக் கூடாது. இது தான் ஸ்பான் நிறுவனத்தின் குறிக்கோள்.
இதன் அடிப்படையில் பல தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு திட்டங்களை ஸ்பான் மேற்கொள்ளவுள்ளது.
தமிழ், சீன, மலாய் என அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 15,000 ஆயிரம் மாணவர்களிடம் இந்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்க ஸ்பான் இலக்கு கொண்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் வாயிலாக அது பெரியவர்களை சென்றடையும் என்ற நம்பிக்கை ஸ்பானுக்கு உள்ளது என்று அவர் சொன்னார்.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஸ்பான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் தீபாவளி பொது உச்சரிப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

