அடுத்த தலைமுறைக்கான இந்திய தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும்!

மலேசிய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய இனமாக, சுமார் 18 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்திய சமுதாயத்தை வழிநடத்த, தலைமைத்துவ ஆற்றல் மிக்க தலைவர்களை உருவாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை வந்துவிட்டதாகவும், சமூக ஆர்வலர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் தலைமைத்துவமும் ஒன்று என கூறிய அவர், அந்த தலைமைத்துவ ஆற்றல் உள்ள தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் அனைத்து தரப்பும் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அந்த ஆற்றல்மிக்க தலைவர்களை அடையாளம் காண முடியாமல், சமுதாயம் தத்தளித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் உள்ளதை கண்கூடாக பார்க்க முடிகின்றது என கூறியுள்ளார்.

சூழ்நிலையை சரி செய்ய மஇகாவின் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவரான கல்வியாளரான முனைவர் த. மாரிமுத்து, முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டி.பி. விஜயேந்திரன், பினாங்கு மாநில ஜசெக முன்னாள் துணை முதல்வர் திரு ப. ராமசாமி, ஜசெகவை சேர்ந்த திரு மு. குலசேகரன், பி.பி.பி முன்னாள் தலைவர் டத்தோ கேவியஸ் போன்றோர், தங்களின் அனுபவத்தை இந்த புதிய இளைஞர்களை உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என கல்வியாளருமான திரு சந்திர சேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, நாட்டின் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமாட், முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் கையிரி ஜமாலுதீன், நூருல் இசா அன்வார், முக்ரிஸ் மகாதீர் மற்றும் பாஸ் கட்சியின் காலம் சென்ற நிக் அஜிஸின் புதல்வர் நிக் அப்துல் ஆகியோருக்கு நாட்டை வழிநடத்தும் ஆற்றல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனை குறிப்பிடுகையில், இந்திய சமுதாயத்தைதில் இது போன்ற ஆற்றல் உள்ள தலைவர்கள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பதில் கூறுவது சற்று சிரமம் என கூறியுள்ளார்.

இந்த நாட்டில் பல ஆளுமையும் ஆற்றலும் மிக்க இந்திய இளைஞர்கள் ஆங்காங்கே உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் ஆளுமை மற்றும் ஆற்றலை வெளிக் கொணரும் முயற்சியில் தங்களின் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பொக்கோ சட்டமன்ற வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான திரு சந்திர சேகரன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles