உலகில் உள்ள தமிழர்களைஉலகத் தமிழர் பொருளாதார மாநாடு அரவணைக்கும் தளமாக விளங்குகிறது! டத்தோ சகாதேவன் பெருமிதம்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 15-
உலகில் உள்ள தமிழர்களை உலகத் தமிழ் பொருளாதார மாநாடு ஒன்றிணைக்கும் தளமாக விளங்குகிறது என்று
தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ப. சகாதேவன் தெரிவித்தார்.

உலகத் தமிழர் பொருளாதார மாநாடு இன்று கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் கோலாகலமாக தொடங்கியது.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசிய, இந்திய, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாட்டின் நிறுவனரும் தலைவருமான தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஆர்எஸ் சம்பத் தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த தருணத்தில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று டத்தோ சகாதேவன் தெரிவித்தார்.

உலகத் தமிழர்களை பொருளாதரத்தில் உயர்த்தும் இது போன்ற மாநாடுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக உலக நாடுகளில் உள்ள தமிழ் வர்த்தகர்களிடயே வர்த்த விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதே வேளையில் வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக ஆலோசனைகள், நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் வழி வகுக்கிறது.

ஆக மொத்தத்தில் இதுபோன்ற மாநாடுகள் தமிழ் வர்த்தகர்களுக்குப் பெரும் பயனாக அமைகிறது என்று டத்தோ சகாதேவன் தமது உரையில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles