சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு மீண்டும் 50 லட்சம் வெள்ளி மானியம்!

ஷா ஆலம் நவ 16-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு மீண்டும் 50 லட்சம் வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த 50 லட்சம் வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சிக் குழ உறுப்பினர் பாப்பா ராயுடு இன்று அறிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ராக்யாட் கைப்பற்றியது.
அன்று முதல் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு 40 லட்சம் வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த மானியம் 50 லட்சமாக உயர்த்தப்பட்டது.

அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கும் 50 லட்சம் வெள்ளி மானியம் ஒதுக்கிய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரிக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மேம்பட்டிக்கு மாநில அரசாங்கம் பெரும் துணையாக இருந்து வருகிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles