
ஷா ஆலம் நவ 16-
2025 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இது இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டது.

இந்த முறை இந்த மானியம் 80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதன் மூலம் அடுத்த ஆண்டு கோவில்கள் , புத்தர் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் சீக்கியர் கோவில்களுக்கு கூடுதல் மானியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

