
பூச்சோங், நவ 20-
குடியுரிமைக்காக 45 ஆண்டுகள் போராடிய மகேஸ்வரி குப்பன் அவர்களுக்கு இன்று குடியுரிமை கிடைத்தது.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் கடும் முயற்சியால் அவருக்கு குடியுரிமை கிடைக்கப்பெற்று இருப்பது பாராட்டுக்குரியது.
பூச்சோங் தாமான் மாஸ் குடியிருப்பைச் சேர்ந்த மகேஸ்வரி க்கு புத்ரா ஜெயா தேசிய பதிவு இலாகா (ஜேபிஎன்) குடியுரிமையை வழங்கியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில பிபிபி தொகுதி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
எனக்கு குடியுரிமை கிடைக்க உதவி பிபிபி கட்சிக்கு மகேஸ்வரி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

