

கோலாலம்பூர் நவ 20-
மலேசிய இந்தியர்களின் விடிவெள்ளியாக விளங்கி வரும் மலேசிய இந்தியர் குரலின் 17 ஆம் ஆண்டு எழுச்சி விழா வரும் நவம்பர் 24 ஆம் தேதி பத்துமலை முருகன் திருத்தலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணி நாட்டில் மாபெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலையென திரண்டு உரிமைக்காக போராடினர்.
இந்தப் போராட்டத்தில் சிறை வாசம் அனுபவித்த ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களில் இன்னமும் மக்களால் பேசப்படும் ஒரு தலைவராக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் விளங்கி கொண்டிருக்கிறார்.
இந்திய சமுதாயத்திற்காக இன்னமும் நாடாளுமன்றத்தில் துணிச்சலாக குரல் கொடுத்து போராடி வருகிறார்.
நவம்பர் 24 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் பத்துமலை பெருமாள் கோவிலில் நடைபெறும் மலேசிய இந்தியர் குரலின் எழுச்சி விழாவில் மாண்புமிகு கணபதி ராவ் கலந்து கொள்கிறார்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு உட்பட மலேசிய இந்தியர் குரலின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று சிலாங்கூர் மாநில மலேசிய இந்தியர் குரலின் தலைவர் மணிமாறன் தெரிவித்தார்.
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

