

கோலாலம்பூர் நவ 20
கடந்த 17/11/2024 (ஞாயிற்றுகிழமை) இந்திய தூதரகம் ஏற்பாட்டில் நடந்த மொழியை பாதுகாக்கும் ஒன்றுகூடும் நிகழ்வு பிரிக்பீல்ட்ஸில் விமரிசையாக நடைபெற்றது
.இந்த நிகழ்வுக்கு ஒடிசா சமூகத்தை சார்ந்த மூன்று இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்த மலேசியவுக்கான இந்திய தூதர் பி. ன். ரெட்டி அவர்கள் சிறப்புரையாற்றி தொடக்கி வைத்தார்.
பத்மஸ்ரீ டத்தோ ரம்லி இப்ராஹிம் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
ஒடிசா சமூக பொருளாதார மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் கிரோன் பனாமாளி, உதவி தலைவர் மந்திர் அராசு நைக், செயலாளர் பிந்திரகுமார், உச்சமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கே. ஸ். பாஸ்கரன், சிவகுமார், பாடகி ஷிமா @கீதா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்திய தூதரகத்தின் கலை, கலாச்சார, கவுன்சிலர் மேடம் அம்பிரித்தா தாஸ், இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
மலேசியாவில் ஒடிசா சமூக கல்வி, மொழி, கலை, கலாச்சாரம், ஆகியவை காக்கப்படும், என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.
இந்த அருமையான நிகழ்வை ஏற்பாடு செய்த இந்திய துதரகத்திக்கும், மேடம் அம்பிரித்தவுக்கும் ஒடிசா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் கிரோன் பனாமாளி, மற்றும் உதவி தலைவர் மந்திர் அராசு நைக், மற்றும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்கத்தின் சார்பில் 31 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

