
கோலாலம்பூர்: நவ 20-
இவ்வாண்டில் நாட்டின் பங்குச் சந்தை மூலதனம் 2 டிரில்லியனைக் கடந்திருப்பது மலேசியாவின் பொருளாதார மீட்சியைக் காட்டுவதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மூலதனச் சந்தைகள் செழித்து, முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இருப்பதை உறுதி செய்ய தொடர் முயற்சிகளை மேற்கொண்ட மலேசிய பாதுகாப்பு ஆணையத்தையும் புர்சா மலேசியாவையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா

