
ஈப்போ,நவ20: தாஞ்சோங் மாலிம் சுகாதார கிளினிக்கின் நேரம் மாற்றம் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் செயல்படுத்துவதற்கும் மாநில சுகாதார இலாகாவின் அறிக்கைக்காக மாநில அரசாங்கம் காத்திருப்பதாக ஆட்சிகுழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
சம்மதப்பட்ட கிளினிக் 24 மணிநேரமாய் இதற்கு முன்னர் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் அதன் நேரத்தை காலை மணி 8 தொடங்கி மாலை மணி 5.00க்கு மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு நிலையிலான கருத்துகள் நிலவி வரும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மாநில சுகாதார இலாக்கை முழுமையான அறிக்கையை சமர்பிக்க தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முழுமையான அறிக்கை கிடைத்தப்பின்னர்,தாம் தொடர் நடவடிகையினை மேற்கொள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் இறங்குவேன் என்றும் கூறிய அவர் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற கூட்டத் தொடரின் போது இச்சிக்கல் குறித்த முழுமையான அறிக்கையையும் தெளிவையும் அவையில் முன்வைப்பேன் எனவும் மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர்நல்வாழ்வு பிரிவிற்கான ஆட்சிகுழு உறுப்பினரான அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நேர மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்,பொது மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின் கவலைகள் குறித்தும் சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அமாட் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டு விட்டதாகவும் அவருக்கும் இவ்விவகாரம் குறித்து நன்கு தெரியும் எனவும் சிவநேசன் மேலும் கூறினார்.
இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கிக் கொண்டிருந்த தஞ்சோங் மாலிம் சுகாதார கிளினிக் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காலை மணி 8.00 தொடங்கி மாலை மணி 5.00 வரையில் இயங்கும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

