கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி விருந்து உபசரிப்பு!

கோலகுபு பாரு, நவ நவ. 20-
தீபாவளி பண்டிகை முடிந்து ஏறக்குறைய இரு
வாரங்கள் கடந்து விட்ட போதிலும் அந்த பெருநாள் குதூகலம் மக்கள்
மத்தியில் இன்னும் குறைந்து விடவில்லை என்பதற்கு ஆங்காங்கே
நடைபெறும் திறந்த இல்ல உபசரிப்புகள் அதற்கு சான்றாக
விளங்குகின்றன.

அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும்
தங்களுடனான தங்களின் அணுக்கமான நட்புறவை தொடரும் விதமாக
தொகுதி ரீதியாக தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வுகளை நடத்தி
வருகின்றனர்.

கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தோ
ஏற்பாட்டில் வார இறுதியில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பு
நிகழ்வில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்
டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் மற்றும் தொகுதி கவுன்சிலர்கள், சமூகத்
தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆடல், பாடல் நிகழ்வுகளோடு நடைபெற்ற அருசுவை உணவுடன் கூடிய
இந்த உபரிப்பு நிகழ்வில் வசதி குறைந்தவர்களுக்கு அன்பளிப்பும்
வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles