
கெடா மாநிலத்தில் பெட்னோக் தோட்ட தமிழ்ப் பள்ளி மூடும் அபாயத்தில் உள்ளது.
மாணவர்கள் இல்லாததால் இந்த பள்ளி மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளியை காப்பாற்ற பள்ளி மேலாளர் வாரியம் அமைக்கப்பட்டது.
இந்தப் பள்ளியின் லைசன்ஸ் கொண்டு பினாங்கு பாகான் டாலமில் புதிய பள்ளியை கட்டுவதற்கு பினாங்கு மாநில அரசாங்கம் 4 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளது.
ஆனால் மூடப்படும் அபாயத்தில் உள்ள இந்தப் பள்ளியை மக்கள் அதிக வசிக்கும் பாகான் டாலமிற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
தமிழ் பள்ளியை காப்பாற்ற நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இதற்கு ஒத்துழைக்க அரசாங்கம் மறுப்பது ஏன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேள்வியை எழுப்பியுள்ளார்