
பினாங்கு நவ 24-
ஒரு நல்ல அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு உதவியாளர்களாக பணி புரியும் நபர்கள் தங்களின் அலுவலகத்திற்கு வரும் பொதுப் புகார் சம்பந்தமான அழைப்புக்களை ‘அலட்சியப்படுத்த’ வேண்டாம் என்றும் மேலும் அதற்கு உடனடி பதில் தருவதிலும் தாமதப் படுத்த வேண்டாம் என்றும் பினாங்கு இந்து இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
அன்மையில் பி40 எனும் தரப்பு குடும்பத்தார்களும், பொது நல இயக்கத்தினர்களும் அவசர ஆபத்து வேளைகளில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் அரசியல் உதவியாளர்களுக்கு விடுத்த அழைபுக்களுக்கு உடனடி பதில் கூறாமலும் அல்லது அவ்வழைப்புக்களை கிடப்பில் வைத்து விட்டு தொடர்வாக இசை மெட்டுக்கள் ஒலிக்கும் படி செய்து விடுகின்றனர்.
இதனால் அழைப்பவர் பொறுமை இழந்து அவர்களுடைய அழைப்புக்களை அவர்கள் தானாகவே துண்டித்துக் கொள்ள செய்வார்கள்.
தற்போது இது போன்ற செயல்கள் அதிகமாக நடைபெற்று வருவதாக அழைத்து பொறுமை இழந்தவர்கள் பினாங்கு இந்து இயக்கத்திடம் புகார் செய்கின்றனர் என்று இயக்கத் தலைவர் டத்தோ ப.முருகையா தெரிவித்தார்.
மாநில நகராண்மைக் கழக உயர் நிலை அதிகாரிகளில் சிலரும், அவர்களின் உதவியாளர்களும், சில மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் மேல் நிலை சேவையாளர்களும் இது போன்ற பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொள்கின்றனர்.
இதனால், நல்ல ஒரு மாநில ஆட்சி நிர்வாகத்திற்கு பெறும் அவப் பெயர் ஏற்பட்டு வருகிறது .
ஆகவே, மாண்புமிகு மாநில ஆளுனரும் முதலமைச்சரும் தயவு கூர்ந்து இது போன்ற உயர் அதிகாரிகளை அடையாளங்கண்டு அவர்களின் பணிகளை சீராகவும், செம்மையாகவும் தொடர்ந்து நடத்தும் படி எச்சரிக்கை இடும்படி இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
இதனால், நடைபெறுகின்ற இந்த நல்ல ஆட்சிக்கு மக்கள் இன்னும் கூடுதல் ஆதரவும், நம்பிக்கையும் பெறுவார்கள் என்பது உறுதி என்று எங்கள் இயக்கம் திடமாக நம்புகிறது என்று டத்தோ ப.முருகையா தெரிவித்தார்.

