
தம்பின், நவ 26-
வீட்டிலேயே குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி திட்டம் தொடர்பில் பயிற்சி கருத்தரங்கு நெகிரி செம்பிலான் ரெப்பா சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
நவம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை DUN Repah வில் இந்த பயிற்சி கருத்தரங்கு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில 25 இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தொழில்நுட்ப தொழிற்பயிற்சி மலேசிய இந்தியர் திறன் முன்னெடுப்பு (மிசி) இந்திய சமூகத்தின் போட்டித்திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் சுப்பரமணியம் இந்த கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நெகிரி செம்பிலான் அரசு EXCO & Repah சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு அடையாளமாக பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த முயற்சியை ஏற்பாடு செய்ததற்காக MISSION மற்றும் மனித வள அமைச்சகத்திற்கு (KESUMA) நன்றி தெரிவித்துக் கொண்டார்.

