கெராக்கான் கட்சியின் தீபாவளி பொது உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் நவ 25-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கெராக்கான் கட்சியின் தீபாவளி பொது உபசரிப்பு நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

கெராக்கான் கட்சியின் தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ், உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன், கட்சியின் சபாநாயகர் பிரபாகரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

நாட்டில் பல்லின மக்களை பிரதிநிதிக்கும் கட்சியாக கெராக்கான் விளங்குகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பில் பொதுமக்களை கெராக்கான் கட்சியின் தலைவர்கள் அன்போடு வரவேற்று உபசரித்தனர்.

ஆடல் பாடல் இன்னிசை விழா வுடன் நடைபெற்ற இந்த தீபாவளி விருந்து உபசரிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles