
பெய்ரூட்: நவ 28-
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து லெபனான் மக்கள் நாடு திரும்ப தொடங்கி உள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் இன்னும் நீடிக்கிறது.
இந்த போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேசமயம் ஏமனில் உள்ள ஹவுதி படையினரும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர்.
கடந்த மாதம் 8ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இருப்பிடங்களை குறி வைத்தும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.