
லண்டன், நவ 28
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் கிளப் அபார வெற்றி பெற்றது.
சொந்த அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் கிளப் ரியால் மாட்ரிட் கிளப்பை எதிர்த்து விளையாடியது.
உலகப் புகழ்பெற்ற இரு கிளப்புகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் ரியால்மாட்ரிட் கிளப்பை வீழ்த்தி .இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை அலெக்சியஸ் மேக், கோடி காப்கோ ஆகியோர் அடித்தனர்.

