பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களின் நலன்களை காக்கும் வகையில் இந்திய சமூக நலத்துறை பிரிவு அமைப்பு!

பினாங்கு, நவ 28-
பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் நலன்களை காக்கும் வகையில் இந்திய சமூக நலத்துறை பிரிவு அமைக்கப்படும் என்று பினாங்கு மாநில ஜசெக தலைவர் மாண்புமிகு ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

பினாங்கு மாநில ஜசெக தலைவர் சகோதரர் ஸ்டீவன் சிம் சீ கியோங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கு மாநில ஜசெக செயற்குழுவின் முதல் சந்திப்பு கூட்டம் எனது தலைமையில் நடைப்பெற்றது.

இச்சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டன.

இதில் முக்கியமாக, மாநில ஜசெக துணைத் தலைவர் மாண்புமிகு சகோதரர் ராம் கர்பால் சிங் அவர்கள் தலைமையில் இந்திய சமூக நலத்துறைக்கு ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது

அவர் விரைவில் இப்பிரிவின் உறுப்பினர்களை நியமிப்பார்.

பினாங்கு மாநிலத்தில் வாழும் இந்திய சமூகத்தின் நலனுக்கான அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கையாள இந்த இந்திய சமூக நலத்துறை பிரிவு ஒரு தீர்வு தளமாக அமையும் என்று அவர் சொன்னார்.

பொது நலனுக்காக அனைத்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தும் கட்டமைப்பு ரீதியான கருத்துக்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று மனிதவள அமைச்சருமான அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles