
கோலாலம்பூர்:
நாட்டில் புகழ்பெற்ற வர்த்தக பிரமுகர் டத்தோ புத்ரி சிவம்
ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ச
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இந்நியமனக் கடிதத்தை அவரிடம் நேற்று ஒப்படைத்தார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கும் ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் இந்த தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக வாரியத்தின் 15 உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இதில் ஏபி மஞ்சா – புத்ரி குழுமத்தின் தலைவர் டத்தோ ஏபி சிவமும் அடங்குவார்.
நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்ட டத்தோ சிவம், துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.