UPSR, PT 3 தேர்வுகள் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்! கல்வி அமைச்சுக்கு டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள்!

கோலாலம்பூர், டிச 1-
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் யூபிஎஸ்ஆர் தேர்வு மற்றும் 3 ஆம் படிவ மாணவர்களுக்கு பிடி 3 தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக்கை பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

தற்போது யூபிஎஸ்ஆர் தேர்வு இல்லாததால் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்பத்திலேயே கல்வியை கைவிடுகின்றனர்.

அதேபோல் பிஎம்ஆர் தேர்வு இல்லாததால் 30,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை கைவிடுகிறார்கள்.

யூபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 இல்லாததால் எஸ்பிஎம் தேர்வு மிகவும் கடுமையாக இருப்பதால் பத்தாயிரம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் அமருவது இல்லை.

இது பெரும் கவலையை அளிக்கிறது.

எஸ்பிஎம் தேர்வு எழுவதற்கு முன்பே மாணவர்கள் தங்களது கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள யூபிஎஸ்ஆர் மற்றும் பிடி 3 தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து படிப்பவர்கள். கல்வியை கைவிட மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.

பிபிபி கட்சியின் இந்த கோரிக்கையை கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பெரும்பாலான பெற்றோர்கள் மீண்டும் யூபிஎஸ் ஆர் மற்றும் பிடி 3 அமல் படுத்த வேண்டும் என்று பெரிதும் விரும்புகின்றனர்.

கல்வி அமைச்சும் களத்தில் இறங்கி பெற்றோர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நாட்டில் எந்த ஒரு மாணவரும் கல்வியை கைவிட கூடாது.

தற்போது உள்ள நிலவரப்படி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை பாதியிலேயே கைவிடுகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மீண்டும் யூபிஎஸ் ஆர் மற்றும் பிடி 3 அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

இன்று பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செயவலை கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ இளையப்பன், செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், பொருளாளர் டத்தோஸ்ரீ டல்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், துணை தலைவர் குமார், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட அனைத்து உச்சமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles