டிசம்பர் 15ஆம் தேதி ஐபிஎப் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டை துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்

காளிதாஸ் சுப்ரமணியம்

செர்டாங், டிச 2-
ஏழை எளிய மக்களின் உரிமைக்குரலாக விளங்கும் ஐபிஎப் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பாங்கி அவனியூ மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

ஐபிஎப் கட்சியின் இந்த 32ஆவது தேசிய பேராளர் மாநாட்டை துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

இந்த பேராளர் மாநாட்டில் ஆயிரம் பேராளர்கள் கலந்து கலந்து கொள்கிறார்கள் என்று ஐபிஎப் கட்சியின் தேசிய செயலாளர் மோகன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

தற்போது மடானி அரசாங்கத்தில் தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

கடந்த 1990ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களால் ஐபிஎப் கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டில் ஏழை எளிய இந்தியர்களுக்காக ஐபிஎப் கட்சி உருவாக்கப்பட்டது.

பல போராட்டங்கள் சவால்களுக்கு மத்தியில்
கடந்த கடந்த 34 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஐபிஎப் கட்சி தொடர்ந்து வெற்றி நடைபோடுகிறது.

இந்த மாநாட்டில் ஐபிஎப் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் முக்கிய தீர்மானமாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உருவாக்கிய இந்தியர்களுக்கான புளு பிரிண்ட் அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்களாகும் என்று அவர் சொன்னார்.

இன்று செர்டாங்கில் உள்ள ஐபிஎப் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் மோகன், இளைஞர் அணி தலைவர் கணேஷ் குமார் சம்பந்தமான, உதவித் தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles