
கோலாலம்பூர் டிச 2-
வரும் 2024 டிசம்பர் 4ஆம் தேதி, அன்று மாலை இந்தோனேசியா, ஆச்சே மாகாணத்தின் வாலி நங்கோரோவிடமிருந்து அமைதிக்கான விருதை பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி பெறுகிறார்
ஆச்சே-இன் வாலி நங்கோரோ மாகாணத்தின் தலைவர் மாண்புமிகு தெங்கு மஹ்மூட் மாலிக், பண்டா ஆச்சேவில் உள்ள இஸ்தானா வாலி நங்கோரோவில் நடைபெற உள்ள விழாவில் இவ்விருதை வழங்குகிறார்.
ஆகஸ்ட் 15, 2005 இல் இந்தோனேசியா குடியரசு மற்றும் கெராக்கான் ஆச்சே மெர்டேகா (GAM) இடையே ஹெல்சின்கி ஒப்பந்தம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, ஆச்சே மாகாணத்தில் அமைதி நிலவ பேராசிரியர் டாக்டர் இராமசாமி எடுத்துக் கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது.
அமைதி உடன்படிக்கையின் விளைவாக, ஆச்சேயில் அமைதியும், நிலைத்தன்மையும் திரும்பியுள்ளன.
ஆச்சே இன்று ஒரு அமைதியான, சிறப்பு அரசியல் தகுதி வழங்கப்பட்ட மாகாணமாக திகழ்கிறது.
பேராசிரியர் பி. ராமசாமியுடன், நான் மற்றும் டேவிட் மார்சல் ஆகியோர் ஆச்சேவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம் என்று உரிமை கட்சியின் இடைக்கால செயலாளர் சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.

