ஆசியானில் தீமோர்-லெஸ்தேவுக்கு நிரந்தர உறுப்பினர அந்தஸ்து- மலேசிய முழு ஆதரவு!

புத்ரா ஜெயா, டிச. 2- ஆசியான் அமைப்பின் முழு உறுப்பினர் அந்தஸ்தை
திமோர்-லெஸ்தே பெறுவதற்கு மலேசியா முழு ஆதரவை வழங்கத்
தயாராக உள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அந்த பிராந்திய அமைப்பின் தலைவர் பொறுப்பை மலேசியா அடுத்தாண்டு
ஏற்கும் போது நிரந்தர உறுப்பினராக தீமோர் லெஸ்தேவை வரவேற்பதற்கு
மலேசியா காத்திருப்பதாக அவர் சொன்னார்.

இந்த நடைமுறைகளை விரைவுபடுத்துவதில் தீமோர் லெஸ்தேவுக்கு
வேண்டிய உதவிகளை நாங்கள் வழங்குவோம் என்று அவர் இன்று இங்கு
தீமோர் லெஸ்தே பிரதமர் காய் ராலா ஷினானா குஸ்மோவுடன் நடத்திய
கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்ற காய்
ராலா நாட்டிற்கு முதலாவது வருகையை மேற்கொண்டுள்ளார்.
இன்ற நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின் போது இந்த ஆதரவை தாம்
தீமோர் லெஸ்தே பிரதமரிடம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

ஆசியான் அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு அதன் உறுப்பு
நாடுகளின் ஆதரவை பெற தீமோர் -லெஸ்தே காத்திருக்கிறது.

ஆசியான் பார்வையாளராக அங்கீகரிக்கப்பட்ட தீமோர்- லெஸ்தே கடந்த
2005ஆம் ஆண்டு ஆசியான் பிராந்திய ஆய்வரங்கில் பங்கேற்றது. அந்த
அமைப்பின் முழு உறுப்பினர் ஆவதற்கு கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச்
4ஆம் தேதி அந்நாடு விண்ணப்பம் செய்தது.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles