காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் டிச 3-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்து போட்டி வரும் டிசம்பர் மாதம் 7,8 ஆம் தேதிகளில் பினாங்கு யூஎஸ்எம் அறிவியல் பல்கலைக்கழக கோப்பா அரினா திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது .
மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீபா ஏற்பாட்டில் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்று ம இகா விளையாட்டுப் பிரிவு தலைவர் மற்றும் ம இகா உச்சமன்ற உறுப்பினர் அண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.
இவ்வாண்டும் நடைபெறும் கால்பந்து போட்டியில்
ஆண்கள் பிரிவில் 40 மாநில தமிழ்ப் பள்ளி குழுக்களும் பெண் பிரிவில் 40 குழுக்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறது.
இந்த போட்டியில் விலாயா மாநிலத்தில் இருந்து ஆறு தமிழ்ப் பள்ளி குழுக்கள் கலந்து கொள்கிறது என்று சன்பெங் தமிழ்ப் பள்ளி வாரியத் தலைவருமான அவர் சொன்னார்.
இந்த போட்டி வெற்றி பெற நாங்கள் பக்கப்பலமாக இருப்போம் என்று அண்ட்ரு டேவிட் தெரிவித்தார்
இதனிடையே இந்த போட்டியில்
மாணவர்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு டத்தோ என்.எஸ். மணியம் கிண்ணமும் மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு அன்னை மங்களம் கிண்ணமும் காத்துக் கொண்டிருக்கிறது.