
கோலாலம்பூர், டிச. 4 – நாட்டில் இவ்வாண்டு சுமார் 290,000 பேர் கற்றல் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
இவ்வாண்டு அக்டோபர் 31 வரையிலான நிலவரப்படி, 289,161 பேர் கற்றல் குறைபாடுடையவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 262,283 பேராக இருந்தது. ஓராண்டில் 26,878 பேர் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
நேர்மறையாக பார்த்தால், அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கற்றல் மாற்றுத் திறனாளிகளாகப் பதிவு செய்வதை அறிந்திருக்கிறார்கள் என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.
மேலும் இது மாற்றுத் திறனாளி பிள்ளைகள் தொடர்பான தப்பெண்ணத்தை அகற்றவும் உதவும் என்று அவர் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2024 தேசிய மாற்றுத் திறனாளிகள் தின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
பெர்னாமா

