
சென்னை: டிச 4
விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சார விளம்பர பேச்சுகள் முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாகும்.
மதச்சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையை முன்வைத்து தவெக பயணிக்கிறது. திராவிடம், தமிழ் தேசியம் என எந்த அடையாளத்துக்கு உள்ளாகவும் சுருங்க விரும்பவில்லை என கொள்கை பிரகடன மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் அறிவித்த பிறகும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புரிதல் இன்றி பேசியுள்ளார்.
இது விளம்பர உத்தியாக, நீண்ட நாள் கழித்து தமிழகம் திரும்பியுள்ள அவருக்கு ஒரு வெளிச்சம் தேடும் முயற்சியாகவே பார்க்கிறோம் என்று கூறினார்.

