
ஷா ஆலம், டிச. 10 – சுபாங் ஜெயாவிலுள்ள அழகு நிலையம் ஒன்றில்
அதிரடிச் சோதனை மேற்கொண்ட போது அங்கு சிகிச்சைப் பெற்றுக்
கொண்டிருந்த பாடகி ஒருவரை சுபாங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்கப்
பிரிவு உறுப்பினர்கள் படம் பிடித்த சம்பவத்திற்காக ஊராட்சி
மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம்
மன்னிப்பு கோரினார்.
தெளிவற்ற சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஓ.பி.) காரணமாக
ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் அந்த பாடகிக்கும் இடையே ஏற்பட்ட
கருத்து வேறுபாட்டினால் இந்த சர்ச்சை எழுந்ததாக அவர்
தெளிவுபடுத்தினார்.
சம்பந்தப்பட்ட அழகு நிலையம் லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த
தாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
தனது தன்மானம், உரிமை மற்றும்
கௌரவம் பாதிக்கப்பட்டதாக அந்த பாடகி கருதியிருக்கலாம்.
அதனால்
நான் நிலைமையை உணர்வதோடு அவரை குறை சொல்லவும்
விரும்பவில்லை என அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பான
செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

