B40 பிரிவை சேர்ந்த 250 பேருக்கு இலவச முடி திருத்தம்!

கோலாலம்பூர்,டிச 10: சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் கொரிய அசோசியேஷன் ஆஃப் மலேசியா (KSM) மற்றும் La Fiorire DSP Global Sdn Bhd ஆகியவை B40 வறுமை கோட்டில் உள்ள 250 குடியிருப்பாளர்களுக்கு இலவச முடி திருத்துவதற்கான புரிந்துணர்வில் கையெழுத்திட்டது.

தகுதியான குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் La Fiorire கொரியன் அழகு குழும நிலையத்தில் இலவச முடி வெட்டும் சேவையை பெறுவார்கள் என்று சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ கூறினார்.

“முதியோர், தனித்து வாழும் தாய்மார்கள் அல்லது B40 சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் என யாராக இருந்தாலும்,அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்த ஒவ்வொரு மாதமும் இலவச முடி வெட்டும் சேவை வழங்கப்படும்.

“ராக்கன் மாஹிர் திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு குறிப்பிட்ட நாடாளுமன்றப் பகுதியில் உள்ள 20 இளைஞர்களுக்கு சிகையலங்கார நிபுணர்களாக ஆவதற்கான திறன் பயிற்சியும் அளிக்கப்படும்.

தகுதி இருந்தால், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்

– பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles