பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியை நோக்கி பக்கத்தான் இந்திய தலைவர்கள் படையெடுப்பால் பிரச்சாரம் சூடு பிடித்தது

பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் டாக்டர் சோபி போட்டியிடுகிறார்.

வரும் டிசம்பர் 7 ஆம் வாக்களிப்பு நடைபெறுவதால் பாடாங் செராயில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு இந்திய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளனர்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கேசவன், ஜெலுத்தோங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் , கெஅடிலான் கட்சி தேசிய துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற கருப்பையா தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி இருக்கிறார்.

இப்போது பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் டாக்டர் சோபி மிகச் சிறந்த வேட்பாளர்.

பாடாங் செராய் தொகுதி மக்கள் அவரை வெற்றி பெற செய்யுமாறு டாக்டர் சத்யா பிரகாஷ், கேசவன் மற்றும் ராயர் ஆகியோர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles