
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது 62 ஆம் ஆண்டு மணிவிழாவைச் சிறப்பாக பல்வேறு இலக்கியப் போட்டி அங்கங்களுடன் நடத்துகிறது.
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் செ.குணாளன் தலைமையில் எதிர்வரும் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்குத் தொடங்கி மாலை மணி 5:30 வரையில் பட்டர்வொர்த், டேவான்ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறும் என்று சங்கத்தின் செயலாளர் ச.நா.வேணுகோபால் கூறினார்.
62 ஆம் ஆண்டு மணிவிழாவை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.
பினாங்கு மாநில காவல் துறையின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறி எனும் தலைப்பில் இலக்கிய உரை நிகழ்த்துவார்.
இலக்கியப் பட்டி மன்றம், கவியரங்கம், நெல்லிக்கனி நாடகம், பண்பாட்டு நடனம், திருக்குறள் பாடலுக்கு அபிநயம், இசை பாட்டு விழா, மூன்று முத்த எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருது. போட்டிகளில் பங்கேற்ற எழுத்தாளர்கள், மாணவர்களுக்குப் பரிசளிப்பு, மேலும் பல இலக்கிய அங்கங்களுடன் ஒரு நாள் மணிவிழா சிறப்பாக நடைபெறும் என்று ச.நா.வேணுகோபால் விவரித்தார்.
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க அறங்காவலர் டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் உட்பட பலரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

