Bukit Kiara Royal Selangor club ஏற்பாட்டில் அனைத்துலக ஜூனியர் கால்பந்து போட்டி

நாட்டில் புகழ்பெற்ற புக்கிட் கியாரா ரோயல் சிலாங்கூர் கிளப் ஏற்பாட்டில் நாளை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மிகப்பெரிய அளவில் அனைத்துலக ஜூனியர் கிண்ணக் கால்பந்து போட்டி நடைபெறுகிறது என்று போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ ஜெரால்ட் ராக்கிஸ் குமார் தெரிவித்தார்.

எட்டு வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட பல பிரிவுகளில் நடத்தப்படும் இந்த போட்டியில் 80 குழுக்கள் கலந்து கொள்கின்றன.

வெளிநாட்டில் இருந்து 20 குழுக்கள் கலந்து கொள்ளும் வேளையில் மலேசியாவில இருந்து அதிகமான குழுக்கள் இந்த போட்டியில் பங்கேற்று அதிரடி படைக்க உள்ளன.

இளம் கால்பந்து விளையாட்டாய் களை உருவாக்கும் வகையில் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு Datuk chu கிண்ணம் பரிசாக வழங்கப்படும் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles