
பினாங்கு டிச 12-
பினாங்கு மாநில எஸ்டிபிஎம் தமிழ்மொழிப் பட்டறை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, புதன்கிழமை காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பினாங்கு மாநிலக் கல்வித்துறையும் பினாங்கு மாநில மாவட்டக் கல்வி அலுவலகங்களின் ஒத்துழைப்புடனும் பினாங்கு இந்து இயக்கத்தின் இணை நிறுவனத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா பினாங்கு மாநிலக் கல்வித்துறையின் மொழிப்பிரிவின் உதவி இயக்குநர் திரு. லோகநாதன் மற்றும் பினாங்கு தமிழ்மொழிப் பிரிவு பள்ளி மேம்பாட்டு நிபுணத்துவப் பயிற்றுநர் ஆகியோரால் சிறப்பாகத் திறப்புரை கண்டது.
இப்பட்டறையில் பினாங்கு மாநிலத்தில் 5 இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி பயிலும் 21மாணவர்கள் (பருவம் 1) பங்கேற்றனர்.
ஏற்பாட்டுக் குழுவினர், இந்நிகழ்ச்சிக்குத் தூண்களாக விளங்கிய பினாங்கு இந்து இயக்கத்தினருக்கும், மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.
எனவே, இவ்வாறான நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இது இந்திய மாணவர்களிடையே தமிழ்மொழியை ஊக்குவிக்கச் சிறந்த வழியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

