மலேசிய இந்தியர்களின் நலன்களுக்காக சிறப்பு கவனம் செலுத்திய ஒரே பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் டிச 12-
மலேசிய இந்தியர்களின் நலன்களுக்காக சிறப்பு கவனம் செலுத்திய ஒரே பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் என்று ம இகா தேசிய பொருளாளர் டத்தோ சிவகுமார் கண்ணா தெரிவித்தார்.

இந்திய சமுகத்தின் நலனுக்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் செய்த பணிகளை மறக்க வேண்டாம்.

இன்று பல இந்தியர்கள் நஜீப்பின் உழைப்பை மதிக்கவில்லை என்பதை நினைத்தால் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்.

அவர் புரிந்த சேவைகளின்றி, மலேசியாவில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் மிகுந்த சவால்களுக்கு ஆளாகியிருக்கும், என்றார் அவர்.

இந்திய சமுதாயத்தின் நலனுக்காக முயற்சித்ததோடு,
மலேசிய இந்தியர்களின் நலனுக்காக சிறப்பு கவனம் செலுத்திய ஒரே பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் என்பதை சிவகுமார் வலியுறுத்தினார்.

2017இல் Malaysian Indian Blueprint குறித்தும், அதன் செயல்பாடுகளை நஜீப் உறுதி செய்ததையும் அவர் சொன்னார்.

இந்திய சமுதாயம் கல்வியில் முன்னேற்றத்தை அடைவதற்கு ஊக்குவிக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை அவர் எடுத்தார். உதாரணமாக, அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு உள்ள கோட்டாவை 7% ஆக உயர்த்தினார்.

மெட்ரிகுலேஷன் இடங்களின் எண்ணிக்கையை 1,500 இடங்களில் இருந்து 2,500 ஆக அதிகரித்தார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles