
கோலாலம்பூர் டிச 13-
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் (GE15) போட்டியிடும் போது உறுதியளித்தபடி, அப்பகுதி மக்களின் பிரதிநிதி என்ற முறையில் சம்பளம் மற்றும் அலவான்ஸ் எடுக்காத அவரது பணி தீவிர அர்ப்பணிப்பாகும்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சராகவும் இருக்கும் அவர், கடந்த GE15 இல் தான் கையெழுத்திட்ட உறுதி மொழியில் இன்னும் உறுதியாக இருப்பதாகவும், பெற வேண்டிய சம்பளம் மற்றும் அலவான்ஸ் தொகையை மசூதிகள், சூராக்கள்,
கோவில்கள் மற்றும் தேவாலயங்கள், அப்பகுதியில் உள்ள B40 குழுவிற்கு பேருதவி புரிந்து வருகிறார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் டத்தோஸ்ரீ இரமணன் மிகவும் பாராட்டுக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

