
காளிதாஸ் சுப்ரமணியம்
ரவாங், டிச 13-
ரவாங் பத்து 16 அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலையில் ஆகம முறைப்படி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு மேல் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
காலையில் சிறப்பு யாக பூஜைகளுக்குப் பிறகு முறையே இராஜ கோபுர விமான கலசங்களுக்கு, பிறகு பரிவார தெய்வங்களுக்கு, இறுதியில் மூலவ மூர்த்தியான முருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் சிறப்பு வருகை தந்து மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் டத்தோஸ்ரீ சரவணனுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
ரவாங் பத்து 16 அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு 10,000 வெள்ளி மானியம் டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்.

மேலும் வருங்காலங்கலில் உதவவிருப்பதாக தெரிவித்துள்ளதாக ஆலய திருப்பணித் தலைவரான மகேந்திரன் முத்து தெரிவித்தார்.
ஆலயம் கும்பாபிஷேக திருப்பணிகள் 18 மாதங்களில் பூர்த்தியடைந்து இப்பொழுது சிறப்பாக மூன்றாவது கும்பாபிஷேகம் கண்டிருப்பது மகிழ்ச்சியை தந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
புதிதாக ஆலயம் எழுப்பப்பட்டு 2001 ஆண்டில் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012இல் இரண்டாவது கும்பாபிச்கேகம் செய்து இவ்வாண்டு ஆகம முறைப்படி சிறந்தமுறையில் பூஜைகள் செய்து மூண்றவது கும்பாபிஷேகத்தை செய்துள்ளோம் என ஆலய கும்பாபிஷேக தலைவர் சுப்பாராவ் டேமுடு கூறினார்.

ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், செலாயாங் தொகுதி மஇகா தலைவர் சிவஞானம், எம்.பி.ராஜா, டத்தோ சுரேஸ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் வெற்றிகரமாக செய்துமுடிக்க ஆலயத்தின் திருப்பணி, கும்பாபிஷேக தலைவர்கள் உட்பட ஆலயத்தின் கிடைநிலை உறுப்பினர்கள் அயராமல் உழைத்துள்ளனர்.

அனைவருக்கும் ஆலயத் தலைவர் இளங்கோ சுப்பைய்யா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் மண்டலாபிஷேக பூஜைகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆலயத் தலைவர் இளங்கோ கேட்டுக் கொண்டார்.

