41 லட்சம் இ.பி.எஃப். உறுப்பினர்கள் 1,450 கோடி வெள்ளியை நெகிழ்வு கணக்கிற்கு மாற்றினர்!

கோலாலம்பூர், டிச. 13-
ஊழியர் சேம நிதி வாரியத்தில் (இ.பி.எஃப்.) உள்ள
55 வயதுக்கும் கீழ்ப்பட்ட சந்தாதாரர்களில் 41 லட்சம் பேர் அல்லது 31.6 விழுக்காட்டினர் இலகு கணக்கிற்கு தொடக்க நிதியாக 1,450 கோடி
வெள்ளியை மாற்றியுள்ளனர்.

மேலும், சேமிப்புத் தொகையிலிருந்து 66 லட்சம் வெள்ளி ஓய்வுகால
கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்டதோஸ்ரீ
அமீர் ஹம்சா கூறினார்.

இவ்வாண்டு நவம்பர் 27ஆம் தேதி வரை மொத்த இ.பி.எஃப்.
உறுப்பினர்களில் நாற்பது லட்சம் பேர் அல்லது 30.5 விழுக்காட்டினர் இலகு
கணக்கு வாயிலாக மொத்தம் 1,160 கோடி வெள்ளியை மீட்டுள்ளனர் என்று
அவர் சொன்னார்.

இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை இலக்கு கணக்கில் வைக்கப்பட்டுள்ள
எஞ்சிய சேமிப்புத் தொகை 740 கோடி வெள்ளியாகும் என மேலவையில்
இன்று அவர் தெரிவித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles